18 நாட்களாக தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18 நாட்களாக 102 அடியில் நீடிக்கிறது.
18 நாட்களாக தொடர்ந்து 102 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை நீர்மட்டம்
Published on

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18 நாட்களாக 102 அடியில் நீடிக்கிறது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும் கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், கீழ்பவானி வாய்க்கால் மூலம் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகிறது.

102 அடியாக நீடிப்பு

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் இம்மாதம் 5-ந்தேதி காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 5-வது வருடமாக 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் உபரி நீராக திறக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 12-ந் தேதி முன்கூட்டியே பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 18-வது நாளாக 102 அடியிலேயே நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com