பாலத்தில் பைக் மோதி விபத்து; பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு புதுப்பெண் பலி - கணவர் படுகாயம்


பாலத்தில் பைக் மோதி விபத்து; பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு புதுப்பெண் பலி - கணவர் படுகாயம்
x

நான்கு வழிச்சாலையில் சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறியது. சாலையோர ஒரு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்தவர் மதன்(வயது 30). இவருடைய மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தனர். உடல் எடை குறைப்பு பயிற்சிக்கூடம் நடத்துகிறவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. அதில் மதன் - சங்கீதா தம்பதியினர் கலந்து கொண்டு விளையாடி உள்ளனர். போட்டி முடிந்து மதுரையில் இருந்து பரமக்குடிக்கு இரவில் பைக்கில் சென்றனர்.

நள்ளிரவில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி நான்கு வழிச்சாலையில் சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறியது. சாலையோர ஒரு பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பைக்கில் இருந்து கணவன், மனைவி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். பைக் மட்டும் பாலத்தி்ல் கிடந்துள்ளது.

பள்ளத்தில் விழுந்ததில் சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மதனுக்கு கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இது பற்றி பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story