

முதன்முறையாக நஞ்சராயன் குளத்திற்கு தடித்த அலகு மண் கொத்தி பறவை வந்தது.
நஞ்சராயன் குளம்
ஊத்துக்குளி அருகே உள்ள நஞ்சராயன் குளத்திற்கு நேற்று சைபீரியா, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் தடித்த அழகு மண்கொத்தி ஒன்று முதல் முறையாக வந்துள்ளது.
நஞ்சராயன் குளம்
ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் 450 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. சைபீரியா, வடக்கு ஐரோப்பிய ஆகிய நாடுகளில் காணப்படும் கடற்கரை பறவையான தடித்த அலகு மண் கொத்தி பறவை ஒன்று முதல் முறையாக நஞ்சராயன் குளத்திற்கு வந்துள்ளது. இது குறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:-
நஞ்சராயன் குளத்திற்கு உள்நாட்டு பறவைகள் மட்டுமல்லாது ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் குளிர்கால வலசை வந்து செல்கின்றன. வருடத்தின் இறுதி மாதங்களில் வலசை வரும் பறவைகள் மார்ச் மாதம் வரை இங்கு தங்கியிருந்து பின்னர் தங்கள் தாய் நாட்டிற்கு திரும்ப செல்லும்.பொதுவாக வட துருவத்தில் வாழும் பறவைகள் குளிர்காலத்தில் இரை தேடவும், கடும் குளிரில் இருந்து தப்பிப்பதற்காக மிதவெப்ப நாடுகளான இந்தியா போன்ற துணை கண்டங்களுக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் எந்தெந்த பறவைகள் வந்துள்ளன என கண்காணிப்பது நடைமுறை.
அவ்வகையில் நஞ்சராயன் குளத்தில் இயற்கை கழக உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளங்கோ குளத்தில் பறவைகளை உற்று நோக்கிய போது 184 -வது பறவையாக முதல்முறையாக தடித்த அலகு மண் கொத்தி வந்தது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரியவகை
மேலும் தமிழகத்தில் இவை வடக்கு ஐரோப்பிய பகுதிகளில் கடற்கரை ஓரங்களில் அரிதாக காணப்படும் இவை உள்நாட்டு நீர் நிலைகளில் காண்பது அரிது. மேலும் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பணிகள் விரைந்து முடிவடைந்தால் மேலும் பல அரிய வகை பறவைகளை நஞ்சராயன் குளத்தில் காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நஞ்சராயன் குளத்தில் மஞ்சள் குறுகு, நீலகண்ட சோலை பாடி, தட்டை வாயன், நீலச்சிறகி, மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கிடா போன்ற பறவைகள் இருந்தன.