

கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ள மேலூரை சேர்ந்தவர் திருவருட்செல்வன் (வயது 48). இவரது மகள் அபிராமி (18). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மைக்ரோ பயாலஜி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சக மாணவிகளுடன் கல்லூரி சென்று விட்டு மாலை வீடு திரும்புவதற்கு கீரனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மேலும் வாலிபர் ஒருவர் திருமண செய்வதற்கு அபிராமியை பெண் கேட்டதாகவும், அவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.