

சென்னை,
அரியலூரில் தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பேட்டி அளித்ததாக பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அரியலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யபட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதோடு, மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.