நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையின் கொடி நிறத்தில், த.வெ.க கொடி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர்
சென்னை,
நடிகர் விஜயின் த.வெ.க. கட்சிக் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பு சார்பில் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையின் கொடி நிறத்தில், த.வெ.க கொடி உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத்தெரிகிறது.
தவெக கொடியில் இடம் பெற்று இருக்கும் யானை சின்னத்திற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இடையீட்டு மனுவை வாபஸ் பெற்றாலும் பிரதான வழக்கு தொடர்ந்து நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஆனந்தன் நீதிமன்றத்தில் விளக்கமளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






