சென்னை - பெங்களூரு இண்டிகோ விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு


சென்னை - பெங்களூரு இண்டிகோ விமானம் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு
x

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை,

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூருக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த வினாம் காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானி மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கினார்.

விமானத்தின் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் 160 பேரும் மாற்று விமானம் மூலமாக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், பயணிகள் சரியான நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். விமானம் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story