காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை


காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x

காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை,

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட் பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் வீரமரணம் அடைந்த அந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் மற்றும் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மரக்கன்று ஒன்றை முதல்-அமைச்சர் நட்டு வைத்தார். அதனை தொடர்ந்து காவல்துறையில் கருணை அடிப்படையில் சேர்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

முன்னதாக காவலர் வீரவணக்க நாளையொட்டி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகருமான எம்.கே.நாராயணனும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1 More update

Next Story