பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக - பாஜக இருக்கிறது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் உள்ளன. வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் ஒதுக்கீடு என்பது முடிந்துபோன விஷயம்.
சிபில் ஸ்கோர் கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.சிபில் ஸ்கோர் நடைமுறையால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக பிரதமரிடம் மனு அளித்தேன்.பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் பயிர்கடனுக்காக விவசாயிகளின் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கல்வியை பொதுபட்டியலுக்கு கொண்டு வராதது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






