சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது


சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
x

கோப்புப்படம்

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை வழங்கவும், சி.ஐ.டி.யு. சார்பில் கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்று வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்றோடு 50-ம் நாளை எட்டியது. போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பேசி தீர்வு காண தமிழக அரசு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் முன்வைத்த கோரிக்கைகளை கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ஏற்றுக்கொண்ட போக்குவரத்து அமைச்சர், இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து போராட்டகாரர்கள் கூறும்போது, ‘தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இதை வலியுறுத்தி வருகிற வியாழக்கிழமை (9-ந் தேதி) தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும்’ என்றனர்.

1 More update

Next Story