தருமபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

இதன் மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
தருமபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து  நாளை முதல் தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 17.02.2026 முதல் 28.03.2026 வரை பழைய ஆயக்கட்டில் இடதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்காக 20 நாட்களுக்கும், அதனை தொடர்ந்து வலதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்கு 20 நாட்களுக்கும் ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பழைய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com