விஜய் பங்கேற்ற கூட்டத்தை உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததா..?

காவல்துறையிடம் அனுமதி கோரிய நேரத்திலேயே கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பங்கேற்ற கூட்டத்தை உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததா..?
Published on

சென்னை,

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வெயிலில் சேலம் த.வெ.க. கூட்டம் - ஒருங்கிணைப்பாளர் கேட்ட நேரத்திலேயே காவல்துறை அனுமதி !

பரவும் செய்தி

சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்திற்கு உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்

“சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதிகோரி த.வெ.க. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வழங்கிய கடிதத்தில், மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டம் நடத்துவதாகவே குறிப்பிட்டுள்ளார்.” என்று தமிழ்நாடு காவல்துறை கடித்துடன் விளக்கமளித்துள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com