விஜய்யை கண்டித்து திமுக, அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

மதுரையில் விஜய்யை கண்டித்து திமுக, அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
மதுரை,
மதுரை அருகே கடந்த 21ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார். அதேபோல, அதிமுகவையும் சீண்டியிருந்தார்.
இந்த நிலையில், மதுரையில் விஜய்யை கண்டித்து திமுக, அதிமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். திமுகவினர் தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில், விஜயின் கேலி சித்திர படத்துடன், `வாட் ப்ரோ; ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ...’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல, அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களில், நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை..நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் இல்லை என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த போஸ்டர் யுத்தத்தால் தற்பொதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.






