

சென்னை,
நடிகர் சத்யராஜின் மகளும், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளருமான திவ்யா சத்யராஜ், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது;-
“சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியபோது, ‘மக்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் அறிக்கையை பார்த்துவிட்டு சொல்கிறேன்’ என்கிறார். ஒரு உதாரணத்திற்கு, நாம் ஒரு டாக்டரிடம் செல்லும்போது நமக்கு என்ன ஊசி போட வேண்டும் என்பதை புத்தகத்தில் படித்து வந்து சொல்கிறேன் என்று கூறினார் என்றால், அந்த மருத்துவமனையில் இருந்து நாம் ஓடிவிடுவோம். அதேபோல், மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற புரிதலே இல்லாவிட்டால் உங்களை நம்பி மக்கள் ஓட்டு போவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
த.வெ.க. தொண்டர்களுக்கு ஒரு சின்ன சவால். உங்களால் முடிந்தால் அடுத்த 3 நாட்களுக்குள் விஜய்யுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள். அதேபோல், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒரு சின்ன சவால். உங்களால் பேப்பரை பார்க்காமல் உங்கள் கட்சியில் உள்ள ஒரு 10 தொண்டர்களின் பெயர்களை சொல்ல முடியுமா? ஒரு கட்சியின் தலைவருக்கு தொண்டர்களின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.