தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
Published on

சென்னை,

மாநில அளவில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் அருகே போலிவாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் என மொத்தம் 1.29 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பயன் பெறவுள்ளனர்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கி கலந்துரையாடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில் ஆட்சியர் மு.பிரதாப் அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com