விநாயகர் சதுர்த்தி: தவெக தலைவர் விஜய் வாழ்த்து

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர்
சென்னை ,
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் கோவில்களில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.என தெரிவித்துள்ளார் .
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்காத நிலையில், இந்த ஆண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






