கொடைக்கானலில் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்து வருகிறது.
திண்டுக்கல்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பதை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






