

அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பி.புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு, தெற்கு பொங்கலூர், பல்லடம், அவினாசி, காங்கயம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் திருப்பூர் வடக்கு வட்டார மேற்பார்வையாளர் கார்த்திகேயன், தெற்கு வட்டார மேற்பார்வையாளர் அலிமா பீவி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் வடக்கு, தெற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.