

உப்புக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 29). இவர், அதே பகுதியில் கார் பழுது நீக்கும் பட்டறை வைத்துள்ளார். நேற்று காலை இவர், ஒர்க்ஷாப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பாம்பு பிடிக்கும் நபரான கோட்டூரை சேர்ந்த அஸ்வின் என்பவருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து ஒர்க்ஷாப்பில் உதிரி பாகங்களுக்கு இடையே பதுங்கி இருந்த சுமார் 8 அடி நீள நல்லப்பாம்பை பிடித்தார். பின்னர் அந்த பாம்பு சின்னமனூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.