மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்

மாநிலங்களவை உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஐ. எஸ். இன்பதுரை மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆறு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவற்றில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த இன்பதுரை மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் அமைத்து உள்ள ஆலோசனைக்குழுவில், கல்வித் துறையின் வளர்ச்சி, புதிய திட்டங்கள், நாட்டின் கல்விக் கொள்கை முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களில் வழிகாட்டும் வகையில், இன்பதுரை எம்.பி. இணைக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கான உத்தரவு, நாடாளுமன்ற விவகாரத் துறை மற்றும் தொடர்புடைய கல்வித் துறைகளுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டிற்கும் அ.தி.மு.க.விற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது என்று கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.






