குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பதுதான் திராவிட மாடலா? - டிடிவி தினகரன்

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குவாரியில் முறைகேடு நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்கல் நடத்தியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

Also Read
ரெயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 35 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு
கோப்புப்படம்

தனக்குச் சொந்தமான குவாரியில் நடைபெறும் சட்டவிரோதச் செயலை அம்பலப்படுத்தியதற்காக 50-க்கும் அதிகமான குண்டர்களை ஏவி தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியிருக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர் தற்போது சட்டவிரோத குவாரிகளையும் நடத்தி வருவதன் மூலம் குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பதுதான் திராவிட மாடலா?

Also Read
மகாமக விழாவையொட்டி கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
கோப்புப்படம்

கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்படும் சட்டவிரோதச் செயல்கள் தமிழகத்தில் தொடர்கதையாகிவரும் நிலையில், அதனைச் செய்தியாகப் பதிவு செய்ய முயன்றோர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

எனவே, சட்டவிரோத குவாரியை நடத்தியதோடு, அதனைச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கு உரிய சிகிச்சை வழங்கிடத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com