திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது: திருமாவளவன்

இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது: திருமாவளவன்
Published on

சென்னை,

யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது. எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும். திமுக கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது. கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com