தேமுதிகவுக்கு சீட் தருவது அதிமுகவின் கடமை - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


தேமுதிகவுக்கு சீட் தருவது அதிமுகவின் கடமை -  பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x

வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான். பொறுத்தவர் பூமி ஆள்வார்கள். நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம். மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக்கொள்ளலாம். தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. வரும் ஜனவரிக்குள் எல்லாம் முடிவு செய்யப்படும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.வரும் காலங்களில் நிச்சயம் ஆட்சியில் பங்கு என்ற நிலை உருவாகும் என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் பக்கு என்று தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே கூறிய நிலையில் பிரேமலதா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story