கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு


கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு
x

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.

1 More update

Next Story