துண்டு பிரசுரம் வினியோகம்

சைபர்கிரைம் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
துண்டு பிரசுரம் வினியோகம்
Published on

திருவாரூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீஸ் மற்றும் நகர போக்குவரத்து போலீஸ் சார்பில் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி, சைபர்கிரைம் போலீஸ் சப்-இஸ்பெக்டர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசுகையில், உங்களது ஏ.டி.எம்., ஆதார், பான் கார்டு குறித்த தகவல்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம். ஏ.டி.எம். கார்டுகளில் உங்களது பாஸ்வேர்டை எழுதக்கூடாது. முகம் தெரியாத எந்த ஒரு நபரையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம். அவ்வாறு நண்பராக இருந்தாலும் அவர்களிடம் தங்களைப்பற்றிய முக்கிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் போது கவனத்துடன் வாங்கவும். தனியார் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம். மேலும் ஆன்லைன் முறை மற்றும் வேறு ஏதேனும் முறையில் தங்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டு இருந்தால் https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com