’வள்ளலாரை போற்றி வணங்குவோம்’ - நயினார் நாகேந்திரன்


’வள்ளலாரை போற்றி வணங்குவோம்’ - நயினார் நாகேந்திரன்
x

அன்பான வழிபாடே, கடவுளின் அருளை பெறும் மார்க்கம் எனும் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் வள்ளலார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வள்ளலார் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

மொழி, மதம், நாடு என எல்லாவித வரையறைகளையும் கடந்து, அன்பால் மட்டுமே ஆண்டவரை வழிபட வேண்டும்.

ஏழைகளின் பசியைப் போக்குகின்ற ஜீவகாருண்யம் என்ற அன்பான வழிபாடே, கடவுளின் அருளை பெறும் மார்க்கம் எனும் மாபெரும் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் வள்ளலார்!

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு, வள்ளலார் ஒரு ஞானகுரு! இன்றைய அவரது அவதார தினத்தில், வள்ளலாரை போற்றி வணங்கி, அவர் காட்டிய வழியில் நடப்போம்!”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story