பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவரது கொள்கைகளையும், மக்கள் நலனையும் போற்றுவோம் - அன்புமணி

பேரறிஞர் அண்ணாவின் 117ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
திமுக நிறுவனரும், மறைந்த முதலமைச்சருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மாபெரும் சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் என்ற வகையில் அவருக்கு எனது வணக்கங்களையும், மரியாதைகளையும் செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டின் பெருந்தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான வருவாய் கிடைக்கும் என்றாலும்கூட மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் அந்த பணம், தொழுநோயாளியின் கைகளில் இருக்கும் வெண்ணெய்க்கு சமமானது என்பதால், அது வேண்டாம் என்று மறுத்தவர். மாநில சுயாட்சி கொள்கையில் உறுதியாக இருந்தவர். அவரது இந்த கொள்கை துணிவையும், மக்கள் நலனையும் இந்த நாளில் போற்றி வணங்குவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






