சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது
சென்னை,
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதன்படி, எழும்பூர், சென்டிரல், குரோம்பேட்டை , பல்லாவரம் ,அண்ணா சாலை, அடையாறு, மயிலாப்பூர் , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
கடந்த சிலநாட்களாக வெப்பம் வாட்டிவதைத்து வந்த நிலையில் , தற்போது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






