கோபியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கோபியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கோபியில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Published on

கடத்தூர்

கோபி வாய்க்கால் ரோடு ராமபுரத்தை சேர்ந்தவர் ராஜன். அவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள கம்மாள குட்டையை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். அவருடைய மகள் கோவர்ஷினி (20). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தினேஷ்குமாருக்கும், கோவர்ஷினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் 2 பேரது பெற்றோர்களுக்கும் தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினேஷ்குமாரும், கோவர்ஷினியும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று பண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் காதல் ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களது பெற்றோர்களை போலீஸ் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com