குறைவான முன்பதிவு... 3 சிறப்பு ரெயில் சேவைகள் ரத்து


குறைவான முன்பதிவு... 3 சிறப்பு ரெயில் சேவைகள் ரத்து
x

குறைவான முன்பதிவு காரணமாக 3 சிறப்பு ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

குறைவான பயணிகள் முன்பதிவு (Poor Occupancy) காரணமாக, பின்வரும் 3 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்விவரம்:-

1. டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – கோட்டயம் சிறப்பு ரெயில் (எண் 06121) நாளை (22-ம் தேதி) மாலை 15.10 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. கோட்டயம் – டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண் 06122) 2025 நாளை மறுநாள் (23-ம் தேதி) மதியம் 14.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. செங்கல்பட்டு – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண் 06153) 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாலை 15.00 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

4. திருநெல்வேலி – செங்கல்பட்டு அதிவிரைவு சிறப்பு ரெயில் (எண் 06154) 2025 அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 04.00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

5. நாகர்கோவில் – டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண் 06054) வருகிற 28-ந்தேதி அன்று காலை 09.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரெயில் (எண் 06053) வருகிற 29-ம் தேதி அன்று அதிகாலை 04.15 மணிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படவிருந்த இந்த ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 More update

Next Story