அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி


அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 8 Jun 2025 11:31 AM IST (Updated: 8 Jun 2025 3:27 PM IST)
t-max-icont-min-icon

2026 தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். மக்களை பற்றி ஸ்டாலினுக்கு கவலை இல்லை. வரும் 2026-ல் அதிமுக அபார வெற்றி பெறும்.

அதிமுக ஆட்சியில்தான் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. மேலும், தமிழகம் முழுவதும் சிறப்பான சாலைகளும் மேம்பாலங்களும் கொண்டு வரப்பட்டன. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை முடக்கிய பெருமை திமுகவையே சாரும். திமுக ஆட்சியில் ஏதேனும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அதனையும் கிடப்பிலேயே போட்டு விடுவார்கள். அதிமுக ஏற்கெனவே அறிவித்த திட்டங்களையும் ஸ்டிக்கர் ஒட்டி, கொண்டு வருவார்கள்." என்றார்.

1 More update

Next Story