மருது சகோதரர்கள் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


மருது சகோதரர்கள் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
x
தினத்தந்தி 24 Oct 2025 11:06 AM IST (Updated: 24 Oct 2025 11:07 AM IST)
t-max-icont-min-icon

வீரத்துக்கு எடுத்துக்காட்டு மருது சகோதரர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போரிட்ட மருது சகோதரர்கள் 24.10.1801 அன்று தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தை போற்றும் வகையில் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை தமிழக அரசு அரசு விழாவாக கடைபிடித்து வருகிறது.

இதனிடையே, மருது சகோதரர்கள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், மருது சகோதரர்களின் நினைவு தினத்தையோட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சிவகங்கைச் சீமையின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இம்மண்ணில் நிலைத்திருக்கும் மருது சகோதரர்கள் நினைவு நாள்.

ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடும் உணர்வை அந்நாளிலேயே விதைத்து, தலைசிறந்த தியாகிகளாகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மருதிருவரின் நினைவை என்றும் போற்றுவோம்! இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் தமிழர்கள் முன்னின்று உயிர்நீத்த வரலாற்றைத் தொடர்ந்து சொல்லுவோம்!

என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story