அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

சென்னை,

தமிழக நீர்வளத் துறை அமைச்சராகவும், தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன் (வயது 87) . அவருக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் நேற்று வீட்டில் திடீரென தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் லேசான காயமடைந்த அமைச்சர் துரைமுருகனை அவருடைய குடும்பத்தினர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com