தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்

தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்

தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்
Published on

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்த பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது (School Innovation Development Project -SIDP) பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (UNICEF), அறிவுசார் பங்கு நிறுவனமாக (Knowledge Partner) செயல்பட்டு வருகிறது. இத்திட்டமானது 8074, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 13, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழிகாட்டி ஆசிரியர்களை கொண்டு, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் முக்கியமான நோக்கம், பள்ளி மாணவர்களிடையே புத்தாக்க கண்டுபிடிப்புக்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில்முனைவோர் கலாசாரத்தை வளர்த்தல், அவர்களுக்கு தலைமை பண்புகளை உருவாக்குதல், பிரச்சனைகளை (தேவைகளை) கண்டறிந்து அதற்கான தீர்வுகாண ஊக்கப்படுத்துதல் ஆகும். கடந்த ஆண்டு SIDP 3.O வில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாத்துக்குளிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி சார்பில் கலந்துகொண்ட மாணவர் அணியினர் சமர்ப்பித்த அன்னாசி விவசாயிகளுக்கு உதவும் அன்னாசி அறுவடை கருவி கண்டுபிடிப்பிற்கு அமைச்சர் ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.

அந்த அணியானது தேசிய அளவிலான IRIS போட்டியில் கலந்து கொண்டது. இந்த அணியின் சிறப்பான கண்டுபிடிப்பை பாராட்டும் வகையில், இக்குழுவிற்கு வெள்ளி பதக்கம் (Silver Medal) வழங்கப்பட்டது. இந்த சாதனை SIDP 3.0 திட்டத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். IRIS போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைப்பதுடன், மேம்பட்ட நிலைகளில் அமெரிக்காவில் நடைபெறும் Regeneron International Science and Engineering Fair (ISEF) போன்ற சர்வதேச மேடைகளில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் வாய்ப்பினையும் இந்த மாணவர் அணி பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் நிர்மல்குமார், இ.ஆ.ப, EDII நிறுவனத்தின் ஆணையர் க.லதா இ.ஆ.ப, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com