டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காணொளி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள்: அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

அரசாங்க பணிகளுக்காக தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை கூட்டங்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு இல்லம் அவசியமாக இருக்கிறது.

டெல்லியில் ஏற்கெனவே இரண்டு தமிழ்நாடு இல்லங்கள் இருந்தாலும், அவை 50 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடங்களாக இருக்கின்றன. எனவே நவீன வசதிகளுடன் அதே இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என கடந்த ஆண்டு முதல் அமைச்சர் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் கட்டிட பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, துரைமுருகன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com