வடகிழக்கு பருவமழை: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு


வடகிழக்கு பருவமழை: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 15 Oct 2025 10:46 AM IST (Updated: 15 Oct 2025 2:36 PM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்

சென்னை,

இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது.இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர்.

1 More update

Next Story