நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பரிதாப பலி


நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பரிதாப பலி
x

ஊட்டியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் மேத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியை சேர்ந்தவர் மேத்தா (71). இவர் நேற்று 5:15 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பாலத்தின் அருகே நின்றிருந்த காட்டு யானை ஒன்று திடீரென மேத்தாவை தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானையை விரட்டினர். பின்னர் மேத்தா சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஊட்டியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார்.

இதுகுறித்து மசினகுடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story