சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு


சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு
x

திமுக ஆட்சியில் பிரிவினை என்ற சொல்லே எடுபடாது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை

இந்து சமய அறநிலையத்துறையின் 2025-26ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், ராமேசுவரம் - காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு பயண வழிப்பைகளை வழங்கி, ஆன்மீகப் பயணத்தை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை, சனாதனம் அல்ல. வடக்கே இது போன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை போல், தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது ராமானுஜர் வாழ்ந்த மண். எல்லோருக்கும் எல்லாமும் ஆகிய மண்.

ஒரு காலத்தில் வல்லபாய் படேலை இரும்பு மனிதர் என்று போற்றுவார்கள். இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்குகின்ற இரும்பு மனிதராக தமிழக முதல்-அமைச்சர் இருக்கிறார். திமுக ஆட்சியில் பிரிவினை என்ற சொல்லே எடுபடாது. பிரிவினை சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story