தமிழக அரசியலில் பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்: தவெக

தேர்தல் களம் இப்போதே சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்டது என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்: தவெக
Published on

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அலைகடலெனத் திரண்ட அன்புத் தொண்டர்கள்: மாற்றத்தின் சங்கொலி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் இன்று எழுச்சியுடன் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் அலைகடலென திரண்டு வந்து விருப்ப மனுக்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

இது வெறும் காகிதங்களுக்கான படிவம் அல்ல; தமிழக மக்களின் கனவுகளைத் தாங்கிப் பிடிக்கப் போகும் ஒரு புதிய மாற்றத்திற்கான உறுதிமொழிப் பத்திரம்! தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்குச் சாட்சியாக, த.வெ.க-வின் இந்தத் தேர்தல் களம் இப்போதே சரித்திரம் படைக்கத் தொடங்கிவிட்டது.என் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com