தர்மபுரிக்கு நாளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வருகை-பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பு

தர்மபுரிக்கு நாளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வருகை-பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்பு
Published on

தர்மபுரி:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நாளை தர்மபுரி வருகிறார். அவர் பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

கலந்துரையாடல் கூட்டம்

தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தர்மபுரியில் நடக்கிறது. கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசுகிறார். கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியில் நாளை நடைபெறும் பா.ம.க. கலந்துரையாடல் கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், முன்னோடிகள், முன்னாள் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் சங்கம் மற்றும் அன்புமணி தம்பிகள் படையின் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி தலைமை தாங்கினார். இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அன்புமணி தம்பிகள் படை செயலாளர் கார்த்திகேயன், தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்.ஏ. கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தர்மபுரியில் நாளை நடைபெறும் பா.ம.க. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் அன்பழகன், முன்னாள் இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் தகடூர் தமிழன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் சந்தோஷ்குமார், சின்னசாமி, சிவகுரு, சந்தோஷ், பசுமை தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சத்திரிய பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com