ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு மார்ச் 15-ந்தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தேர்வர்களுக்கு மின்னஞ்சல்/குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 தேர்வு மார்ச் 15-ந்தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற இருந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மார்ச் வரும் 15-ந்தேதி குரூப்-2 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குரூப்-2 (ம) 2A பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான தாள்-1- தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டது. மேற்கண்ட இரண்டு தேர்வுகளையும் கீழ்க்கண்டவாறு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. 15.03.2026 மு.ப. (ஞாயிறு) - தொகுதி-2 A தாள்-2 (OMR) பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு

2. 15.03.2026 பி.ப. (ஞாயிறு) - தொகுதி-2 (ம) 2A தாள்-1 (விரிந்துரைக்கும் வகை) தமிழ் மொழி தகுதித் தேர்வு

மேற்கண்ட தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.02.2026-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) /குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

எதிர்வரும் 22.02.2026 மு.ப. அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2க்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.02.2026 அன்று வெளியிடப்படும். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail) / குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com