கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பாவூர்சத்திரம் அருகே நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
Published on

கடையநல்லூர்:

பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் குறும்பலாப்பேரியில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மாசெல்லதுரை முதல் பரிசாக ரூ.30,000 காசோலை மற்றும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், நகர செயலாளர் அப்பாஸ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளருமான கவுன்சிலர் முருகன் மற்றும் யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com