புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு

கோப்புப்படம்
ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி இருந்து வருகிறார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதைப்போல், புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி அரசு ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசிப்பருப்பு, நெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






