புதுக்கோட்டை: நெய்வேலி வீரத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை: நெய்வேலி வீரத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Published on

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி வடபாதி வடதெரு கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீரத்தாயி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, தொடர்ந்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைடைவந்த நிலையில் யாக சாலை பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பூஜையின் நிறைவில் கடம் புறப்பாடு நடைபெற்றது. கருடன் வானில் வட்டமிட அம்பிகையின் ஆலயத்தில் உள்ள கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Also Read
திருப்பதி தெப்போற்சவம்.. தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்த கல்யாண வெங்கடேஸ்வரர்
புதுக்கோட்டை: நெய்வேலி வீரத்தாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மற்றும் மெய்யன்பர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com