பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள்; ரஜினிகாந்த் வாழ்த்து


பிரதமர் மோடிக்கு 75-வது பிறந்தநாள்; ரஜினிகாந்த் வாழ்த்து
x

பிரதமர் மோடிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் நேற்று இரவு முதலே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியின் வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிறநாட்டின் தலைவர்கள், ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற மாநில முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள், பாஜக தலைவர்கள் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில்,

மிகவும் மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய என் அன்பான பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நமது அன்பான தேசத்தை வழிநடத்தும் நித்திய பலம் கிடைக்க வாழ்த்துகிறேன். ஜெய் ஹிந்த் என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story