மாநிலங்களவை எம்.பி.க்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவை எம்.பி.க்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி.க்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.

கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி முடிவடைவதாக இருந்தது. அதுபோல வைத்திலிங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29-ந்தேதி முடிவதாக இருந்தது. 2 பேரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

இதில், தி.மு.க. தனது வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமாரை நிறுத்தியுள்ளது. தி.மு.க.விற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com