தர்மபுரி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது-1¼ டன் பறிமுதல்

தர்மபுரி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது-1¼ டன் பறிமுதல்
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே காரில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், போலீஸ் ஏட்டுகள் வேணுகோபால், கோவிந்தன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி-பாலக்கோடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புலிகரை அருகே சந்தேகபடும்படியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 50 கிலோ எடை கொண்ட 27 மூட்டை ரேஷன் அரிசி சிக்கியது. மொத்தம் 1,350 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக காரில் வந்த தர்மபுரி மாவட்டம் மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 38), கொளகத்தூரை சேர்ந்த வினுமான் (34) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய ரேஷன் அரிசி மூட்டைகளை அவர்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com