ஸ்லீப்பர் வகை தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு


ஸ்லீப்பர் வகை தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்.இ.டி.சி முடிவு
x
தினத்தந்தி 15 April 2025 10:42 AM IST (Updated: 15 April 2025 10:46 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க திட்டமிட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால், தனியாரிடம் இருந்து 20 ஏசி அல்லாத ஸ்லீப்பர் பஸ்களை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.இ.டி.சி கீழ் தற்போது 1,080 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக எஸ்.இ.டி.சி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது ஏசி அல்லாத சொகுசு பஸ்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. ஆனால் போதிய எண்ணிக்கையில் நான் -ஏசி பஸ்கள் இல்லை. எனவே தான் தனியாரிடம் 20 ஏசி அல்லாத சொகுசு பஸ்களை வாங்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநரையும் சேர்த்து தான் வாடகைக்கு எடுக்கிறோம். ஒரு கிலோமீட்டர் இவ்வளவு தொகை என்று ஒப்பந்தம் போடப்படும்" என்றார்.

1 More update

Next Story