பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிபட்டன

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிபட்டன
பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே கண்ணாடி விரியன் பாம்புகள் பிடிபட்டன
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சாக்கடை கால்வாய் பகுதியில் 2 விஷம் கொண்ட பாம்புகள் கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சாக்கடை கால்வாய் பகுதியில் பதுங்கி இருந்த விஷம் கொண்ட 2 கண்ணாடி விரியன் பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பாம்புகளையும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com