மாநிலங்களவை தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.
மாநிலங்களவை தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
Published on

சென்னை,

தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, இன்று நண்பகல் 12.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளனர்.

அதேபோல, திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கமல்ஹாசனும் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com